• TRENDING | பர பர

‘என் கஷ்டம் உனக்குப் புரியலையா?’ - செல்லப்பிராணியிடம் புலம்பிய சிம்பு! வைரல் வீடியோ!





நீண்ட கொரோனா இடைவெளிக்குப் பின், திரையில், சிம்புவின் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, ‘மாநாடு’, ‘பத்து தல’ உட்பட படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தன்னை அப்டேட்டாக இருந்த சிம்பு, இடையில் சில காலம் அதிலிருந்து வெளியேறி, பின்னர் மீண்டும் அதில் இணைந்தார். அப்படி தன் லேட்ஸ்ட் நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகிறார் சிம்பு.

அந்த வகையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, தனது செல்லப்பிராணியான நாய் கோகோவுடன் சிம்பு, ஒரு வேடிக்கையான பேச்சைப் பேசி அனைவரின் பார்வையையும் கவர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ‘முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம்தான் உனக்கு! நான் தனியா இருக்கும்போது நீ மட்டும் ஜாலியா இருந்தா அது நியாயமே கிடையாது’ என்று அந்த வீடியோவில் தனது திருமண ஆசையை, செல்லப் பிராணியான கோகோவுடன் பகிர்ந்துள்ளார். சிம்புவின் இந்த பேச்சும், அதற்கு அந்த நாய் கொடுக்கும் ரியாக்ஷனும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் எட்டு லட்சத்திற்கும் அதிகமனவர்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டும் வருகிறது.

Instagram link : https://www.instagram.com/p/CLRWalRlXSb/

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :