• TRENDING | பர பர

ஆந்திரா ஆவக்காய்!


- ராகவ்குமார்





நமது பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் ரஸ்மிகா மந்தனா வரும் ஏப்ரல் மாதம் தமிழ் ரசிகர்களை கவர திரைக்கு வர இருக்கிறார். இந்த ஆந்திரா ஆவக்காய் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் திரையில் இணைத்துள்ளார்.

கார்த்தி-ரஸ்மிகா ஜோடிக்கு திரை கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக சுல்தான் புகைப்படத்தை பார்த்தவர்கள் சொல்கிறர்கள். இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மகாபாரத்தில் பாண்டவர்களின் வெற்றிக்கும், தர்மம் நிலைநாட்ட நின்றதற்கும் கிருஷ்ணனின் பங்களிப்பு முக்கியமானது. இந்த கிருஷ்ணர் ஒரு வேளை கௌரவர்கள் பக்கம் நின்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் சுல்தான் கதை என்கிறார் டைரக்டர்.

நினைத்து பார்க்கவே வித்தியாசமாகவும், சுவாரசியம் மிக்கதாகவும் இருக்கும் இந்த ஒன்லைன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நாம் ஏப்ரல் வரை வெயிட் செய்ய வேண்டும்.

கார்த்திக்கு ‘கைதி’க்கு பிறகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் சுலதான். இந்த எதிர்பார்ப்பு வெற்றி பெற வாழ்த்துவோம்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :