• TRENDING | பர பர

வானில் பறந்தவாறு இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்த பிரதமர் மோடி!





இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை, அந்த ஒரு நொடிப்பொழுதில் ரசித்துப் பார்த்தாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, பாரதப் பிரதமர் மோடி, ஒருநாள் அரசுமுறை பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார்.

அதன்படி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை சென்னையில் முடித்துக்கொண்ட பின்னர், பிரதமர் ஒரு தனி ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் புறப்பட்டார்.

அப்போதுதான், ஹெலிகாப்டரில் இருந்தபடியே சேப்பாக்கத்தில் நடந்துகொண்டிருந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை கண்டுள்ளார். அதன் சுவாரசிய அனுபவத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில், வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வெளியிட்டு, ‘அரங்கில் நடக்கும் சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியை ரசித்தேன்’ என பதிவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

Twitter link : https://twitter.com/narendramodi/status/1360872166175113217/photo/1

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :