• SPARKLES | மினுமினு

மிஸ் பண்ணிடாதீங்க: 6-வது நாள் கட்டிப்புடி தினம்!


கட்டுரை: ஷைனி





காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் காதலர் தினத்தை கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை வேலன்டைன் வீக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தின் ஆறாவது நாளன்று ஹக் டே கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் அர்த்தம் கட்டிப்பிடி தினம் ஆகும். இந்த நாளன்று நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு சந்தோஷத்தையும் அன்பையும் கட்டிப் பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்தும் நாள் ஆகும்.

தற்போதைய காலகட்டத்தில் நம்மை அதிகமாக நேசிப்பவர்களை நாம் சரியாக கவனிக்க மறந்துவிடுகிறோம். அவ்வாறு வரும்போது அவர்களுக்கு விரக்தி ஏற்படுகிறது. இதனால் நம்மை அதிகம் நேசிப்பவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும் விதமாக நாம் கட்டி அணைத்துக் கொள்வது தீர்வாகும். இப்படி கட்டிப்பிடிப்பது காதலை வெளிப்படுத்துவதற்காக மட்டுமல்ல அதிகமாக கோபத்தில் இருக்கும் உங்கள் துணையை சாந்தப்படுத்தவும் இது சிறந்த வழி ஆகும். மேலும் எளிமையான முறையில் நம்முடைய உணர்வுகளை நாம் வெளிப்படுத்துவதற்கு சிறந்த வழியாகும்.

நீங்கள் ஒருவரை கட்டிப் பிடிக்கும்போது அவர்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு எளிமையான முறையில் உணர்த்த முடியும். உங்கள் காதலன் அல்லது காதலி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது அவர்களை மென்மையாக அணைத்தால், அவர்கள் மன இறுக்கம் தீர்ந்து ரிலாக்ஸ் ஆவர்கள்! அவர்கள் மனதின் ஏமாற்றம், தனிமை, கோபம் போன்றவற்றை நீக்கவும் இச்செயல் உதவுகிறது. மேலும் நமக்கு விருப்பமனவர்களை கட்டி அணைப்பதால் நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து புத்துணர்வு ஏற்படுகிறதாம்,


Comments

says :

says :

says :

says :

says :

says :

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :