• GLITTERS | பளபள

மரணத்தை முத்தமிட்டு திரும்பினோம்!


சங்கர் ஸ்ரீநிவாஸ்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி7) உடைந்து சரிந்தது. அதனால் அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு கங்கையாற்றில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்கள் வெள்ளப்பெருக்கில் இடிந்து கடும் சேதமடைந்தன. அச்சமயம் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிகொள்ள, அவர்கள் நிலமை குறித்து இன்னும் தெரியவரவில்லை. அம்மலைப் பகுதியில் அமைந்திருந்த பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 30 போ உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

அப்படி இடிபாடுகளில் சிக்கி மீண்டவெர்களில் 12 பேர், தபோவன் நீர் மின்நிலையத்தில் பணீயாற்றியவர்கள் சுரங்கம் முழுவதும் சூழ்ந்த தண்ணீரில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித் தவித்து மீண்டவர்களீல் ஒருவர் -

ஹைதராபாத்தைச் சேர்ந்த புவியியலாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி!

‘’என் வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருப்பதாக உணர்ந்தேன். சுரங்கத்தினுள் நாங்கள் வேலை செய்தபோது, திடீரென்று ஒரு பயங்கர சப்தம் கேட்டது. என்னவென்று நாங்கள் சுதாரிப்பதற்குள், குபீரென்று சேறும் சகதியுமாக தண்ணீர் சூழ்ந்து கொண்டது. அவ்வளவுதான் எங்கள் கதை முடிந்தது என்று நினித்தேன்’’ என்கிறார் ஸ்ரீனிவாஸ் ரெட்டி

’’அங்குள்ள தபோவன் மின் நிலையங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டோம். எப்படியோ கஷ்டப்பட்டு சுரங்கத்தின் நுழைவாயிலை அடைந்தபோதுதான் தெரிந்தது அது முற்றிலும் மூடப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சிறு வெளிச்சம் அதிலிருந்து தெரிந்தது. அதுதான் எங்கள் உயிரைக் காப்பாற்றியது. எங்கள் ச்க ஊழியர் ஒருவரின் செல்போன் வேலை செய்வதை அந்த வெளிச்சத்தின் மூலம் உணர்ந்தோம். உடனே தகவல் அனுப்பி, நாங்கள் காப்பாற்றப்பட்டோம்’’ என்கிறார், அந்த பீதி இன்னமும் அகலாமல்!

தபோவன் சுரங்கத்தினுள் சிக்கிகொண்ட வீரேந்திர குமார் என்பவரின் செல்போன் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்புடன் இருந்ததே இந்த 12 பேர் உயிரைக் காப்பாற்றக் காரணமாகியது!

‘’திடீரென வெள்ளம் சூழ்ந்ததில் மரணபீதி ஏற்பட்டது. அப்போது என் செல்போன் அதிர்வதை உணர்ந்தேன். நெட்வொர்க் வேலை செய்வதை உணர்ந்தேன். அதன் மூலம் உடனடியாக என் மேலதிகாரியை தொடர்பு கொண்டு நாங்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறினேன். உடனடியாக அவர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் விரைந்து வந்து எங்களை மீட்டனர். நாங்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோம்’’ என்கிறார் வீரேந்திர குமார்.

அங்கு சிக்கி கொண்டவர்களில் நேபாளத்தைச் சோந்த பசந்த் என்பவரும் ஒருவர்! அதிச்சி விலகாமல் அவர் சொன்னது: `வெள்ளப்பெருக்கால் நீா்மின் நிலையம் இடிந்து சேதமடைந்த நிலையில், 300 மீட்டா் ஆழத்தில் அமைந்திருந்த மின்நிலைய சுரங்கத்தில் 12 பேரும் சிக்கிக்கொண்டோம். சுரங்கத்துக்குள் பல மணி நேரம் சிக்கியிருந்ததால், நம்பிக்கை இழந்துவிட்டோம். அந்த நேரத்தில் சுரங்கத்துக்குள் சிறிது வெளிச்சம் வந்ததோடு, மூச்சுவிடும் அளவுக்கு காற்றும் வீசியது. திடீரென சக ஊழியரின் செல்போன் வேலை செய்ததால் தகவல் அனுப்பி, இதோ.. உயிர் பிழைத்தோம்’’ என்கிறார் அதிர்ச்சி விலகாமல்!

வீரேந்திர குமார் தகவல் தெரிய வந்ததும் உடனடியாக இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினா் அங்கு விரைந்துசென்று, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 12 பேரையும் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.

’’எங்களுக்குத் தகவல் தெரிந்து, நாஙள் சுரங்கத்துக்குள் நுழையும்போது சக்திமிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி தடுப்புகளை அப்புறப்படுத்தவே அச்சமாக இருந்தது. அதில் யாரேனும் சிக்கியிருந்தால் நிலைமை மோசமாகிவிடுமே என்று அஞ்சினோம்’’ மீட்புப் பணீயில் ஈடுபட்ட இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி சஞ்சய் குமார்.

உத்தரகண்டில் நடந்த இந்த பனிப்பாறை சரிவுக்கான காரணத்தைக் கண்டறிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஆகியவை உதவி வருவதாக உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

Comments

G.Ravindran says :

The report on the Uttarakhand tragedy has highlighted the humanitarian efforts and the emotions of those saved from certain death. Well written

கேஆர்எஸ் சம்பத் says :

தெய்வம் மனித ரூபத்தில் உதவியது அவர்கள் செய்த புண்ய பலத்தால். வேறென்ன சொல்ல?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :