• SPARKLES | மினுமினு

வீட்டில் பணம் சேர்க்கும் பஞ்சகவ்ய விளக்கு!


கட்டுரை: சுபஸ்தினி.

சிலருக்கு எவ்வளவுதான் அதிக வருமானம் இருந்தாலும், அதற்கு மீறிய செலவு வந்து, வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை காணப்படும்! இப்படி பண விரயத்தைத் தடுத்து, வீட்டில் செல்வ கடாக்ஷம் நிலைக்க எளிய பரிகாரம் ஒன்று இருக்கிறது.

அதாவது ஒவ்வொரு வெள்ளிகிழமை மாலையிலும் கோ மாதா படம் அல்லது மஹாலட்சுமி படத்துக்கு முன்பாக பஞ்சகவ்ய விளக்கில் நெய் ஊற்றி ஏற்றி வைத்து வழிபட்டால், வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வம் சேரும்.

அந்த காலங்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் அடிக்கடி ஹோமம், யாகங்கள் போன்றவற்றை செய்து வந்தனர். இதன் மூலம் அங்கு பாசிட்டிவ் எனர்ஜி உருவாகி, செல்வ கடாக்ஷம் உட்பட பல நற்பலன்களை கொடுத்தன. ஆனால், இப்போது ஹோமம் போன்றவற்றை வீடுகளில் செய்வது சுலபம் இல்லை. ஆனால் அப்படி யாகம் மற்றும் ஹோமங்கள் செய்த பலனைக் கொடுக்கக் கூடியது பஞ்சகவ்ய விளக்கு.

பசுவுக்கு தெய்வீகத் தன்மை இருப்பதால்தான், நமது வழிபாட்டில் பசுவை கோ மாதா என்றழைத்து சிறப்பு வழிபாடுகள் செய்கிறோம். அப்படி பசுவின் மூலம் கிடைக்க கூடிய பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய 5 பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்கப்படுகிறது.

இந்த விளக்கின் சிறப்பம்சம் – இதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றியதும் இறுதியில் விளக்கும் சேர்ந்து எரிந்து புகை பரப்பும். இதுவே வீட்டில் ஹோமம் செய்த பலனைக் கொடுக்க கூடியது மேலும் வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை அடியோடு வெளியேற்றி வீட்டில் சண்டை, சச்சரவுகளை நீக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, லட்சுமி கடாஷம் நிறையச் செய்யும் என்பது என்னுடைய சொந்த அனுபவம்.

பஞ்சகவ்ய விளக்கை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் கோ-பூஜை மற்றூம் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கும் ஹோமம் நடத்துவதற்கும் சமமாக கருதப்படுகிறது. வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம். அச்சமயம் அவரவர் வசதிக்கேற்ப கல்கண்டு, திராட்சை, பழங்கள் அல்லது பாயசம் என்று ஏதாவது நிவேதனம் செய்வது சிறப்பு.

வழிபடும் முறை: வெள்ளிகிழமைகளில் பூஜை அறையில் ஒரு தாம்பூலத் தட்டில் இரண்டு வெற்றிலைகளை வைத்து, அதன் மேல் பஞ்சகவ்ய விளக்கு வைத்து அதில் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இந்த விளக்குக்கு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் புகை வீடு முழுவதும் பரவி, தெய்வ அனுகிரகம் கிடைக்கும். இந்த புகையினால் நம் வீட்டிற்கு அனைத்து தேவர்களும், தெய்வங்களும் வருவதாக ஐதீகம். இந்த விளக்கின் திரி எரிந்தபின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும்.

அப்படி விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். விபூதி தயாரிப்பில் பஞ்சகவ்யமும் அடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திருநீறைப் பூசிக் கொள்வதாலும் நன்மைகள் ஏற்படும். இப்படி பஞ்சகவ்ய தீபம் ஏற்றி வழிபடுவதால் ஹோமம் செய்வதற்கு இணையாக நற்பலன்கள் கிடைத்து, வீட்டில் சுபிட்சம் பெருகி, வருமானம் அதிகரிக்கத் துவங்கும். அவை செல்வ கடாஷமாக நிலைத்து நிற்கும்.
Comments

ஆா்.நாகரா ஜன் says :

தினமலா் பேப்பாில் 3மாதம் முன்பு வந்த விளம்பரம் பாா்த்து திருச்சிக்கு அருகில் உள்ள ஊாிலிருந்து 1விளக்கு 10₹ வீதம் 100விளக்குகள் வாங்கினேன் அதில் விளக்கமாக சொல்லியிருந்தபடி விபரம் சொல்லி செய்யச்சொன்னேன் விளக்கு ௌஎரிந்தது ஆனால் சாம்பல் ஆக வில்லை புகையும் வரவில்லை எல்லோரும் என்னிடம் வருத்தப்பட்டாா்கள் பஞ்ச கவ்ய விளக்குகள் 84மீததம் இருந்தது கம்பெனிக்கே திருப்பி அனுப்பி விட்டேன் என் சொந்த அனுபவம் இது தீபம் எாிந்து முடிந்த பின் விளக்கு அப்படியே காியாகவே இருந்தது

கேஆர்எஸ் . சம்பத். says :

இதிலேயும் டூப்ளிகேட் இருக்குதோ என்னவோ? நல்லதை நினையுங்க.. நல்லதே நடக்கும்.. மனசு சுத்தம் ஆகிவிட்டால் எந்த பரிகாரங்களும் வேண்டாம் ங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :