• GLITTERS | பளபள

என்ன ஆச்சு சின்னம்மா?


கட்டுரை: பிரேமி பாஸ்கர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, இம்மாதம் 27-ம் தேதியன்று விடுதலையாக இருந்த நிலையில், திடீரென்று ஜனவரி 20-ம் தேதி காலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்ததாகவும் தீவிர பாதிப்பு ஏதுமில்லை என்றும் சொல்லப்பட்டது.

பின்னர், அவர் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக சசிகலாவுக்கு மூச்சுத்திறணல் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியானது.

சர்க்கரை நோய், தைராய்டு, இருமல், காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் எனவும், சிகிச்சைக்குப்பின் அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் 20 ஆம் தேதி இரவு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால், ஆன்ட்டிபயாடிக் மற்றும் பிராண வாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்தார். ஆனால், பின்னர் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், 20-ம் தேதி நள்ளிரவில் அவரை மருத்துவர்கள், ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர்.. இதனிடையே, சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என 21-ஆம் தேதி காலை தகவல் வெளியானது. பின்னர் சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் போரிங் அரசு மருத்துவமனை மர்ரும் அங்கிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு 21 ஆம் தேதி மதியம் சசிகலா மாற்றப்பட்டார்.

அப்போது, வீல் சேரில் வெளியே அழைத்து வரப்பட்ட சசிகலா, அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவின் நுரையீரலில் தீவிரத் தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நுரையீரல் நிபுணர் பிரசன்னகுமார் தாமஸ், “தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாலே கூடுதல் கவனத்துடன் சிகிச்சை தேவைப்படுவதாக பொருள். குறியீடு 10-க்கு மேல் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆக்ஸிஜன் தேவைப்படும்” என்றார்.

விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், சசிகலாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, தைராய்டு, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றூ (ஜனவரி22) சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில் சசிகலா உடல்நிலை தொடர்பாக, கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார். சசிகலா விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தனது புகாரில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா விடுதலையானதும், ஓசூர் - ஆம்பூர் - ஸ்ரீபெரும்புதூர் வழியாக சசிகலாவை அழைத்து வருவதற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை தினகரனின் அ.ம.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதே நாளில்தான் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா நடக்கவிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, வரும் புதன்கிழமை (ஜனவரி 27) சசிகலாவின் தண்டனைக் காலம் முடிவடைகிறது அதன்பிறகு அவர் சிறைக் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்தாலும், அன்வரது விடுத்லை தள்ளிப் போடப்படாது என்று அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். அந்தவகியில், விடுதலைக்குப் பின், தற்போது சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் வாங்கப்பட்டு விடும். அதனால்,அதன் பின்னர், சசிகலாவின் சிகிச்சைக்கும், பாதுகாப்புக்கும் கர்நாடக அரசு தான் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சசிகலா அடுத்த 15 நாட்களில் குணமடைந்து விட்டால்கூட பழையபடி அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடபட முடியுமா எனபது சந்தேகமே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அந்தவகையில் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சசிகலா பெங்களூரு சிறை செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து செய்த சபதம் நிறைவேறாமல் போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்குமுன் உடல்நிலை பாதிக்கப்பட்டதும், இப்போது தேர்தலுக்குமுன்பாக சசிகலாவில் உடல்நிலை பாதிக்கப்படிருப்பதும் தற்செயலான ஒன்றுதானா என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Comments

Shyamala Ranganathan says :

இவருக்கு இத்தனை முக்கியத்துவத்தை எதற்காக ஊடகங்கள் தருகின்றன என் போன்ற சாதாரண மக்களுக்கு இது எரிச்சலை தருகுறது

subramanian says :

Sasikala is an ordinary criminal and is in Victoria Hospital.. Whether she is live or dead is is of no concern to the nation . If news about her is highlighted in an e-paper like Kalki, ( a magazine devoted to promoting cultural values it means that our journalists are still in the 20th century!

கேஆர்எஸ். சம்பத். says :

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை நாம் எப்படி தீர்மானிக்க முடியும்? ஒரு கதை. நாத்திக வழிப்போக்கன் ஒருவன் வழியில் ஒரு இடத்தில் அன்னதானம் நடந்த இடத்திற்குச் சென்று, உணவு அருந்த மற்றவர்களோடு அமறுகிறான். அன்னதானம் செய்பவர் , எல்லோரும் உணவு அருந்துமுன் கடவுளை பிரார்த்தனை செய்து விட்டு உணவு அருந்துங்கள் என்கிறார். நாத்திகர் மறுக்கவே, அவரை விரட்டி விடுகிறார். அவர் வெளியேறி விடுகிறார். உடன், கடவுள் அன்னதானம் செய்பவர் முன் தோன்றி " இத்தனை நாட்களாக நான் அவனுக்கு உணவு அளித்தேன் இன்றைய ஒரு நாளில் நீ அவனை விரட்டி விட்டாயே? என்று கடிந்து கொண்டார். ஓடிச்சென்று நாத்திகரை உணவு அருந்த அழைத்து வந்தார் அன்னதானம் செய்பவர். நாத்திகர் அறியாமலேயே கடவுள் அவரையும் ரட்சிக்கிறார் . யாவும் இறைவன் செயல். அவன் இட்ட வழிதான் எல்லோரும் போகும் பாதை .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :