• TRENDING | பர பர

தல அஜித் சிக்கிமுக்கு பைக்கில் பயணம்! 4,500 கிமீ பைக் ரைடு!





பைக் ரைடு என்றாலே தல அஜித்துக்கு பிடித்தமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், தல அஜித், நேற்று பைக்கிலேயே சிக்கிம் கிளம்பியிருக்கிறார். மொத்தம் 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்கிறார் அஜித்.

அஜித் நடிப்பில் ‘வலிமை’ படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ‘வலிமை’ படப்பிடிப்பிலிருந்து அவருக்கு பிரேக் கிடைத்துள்ளதால், அதைப் பயன்படுத்தி, அஜித் பைக்கில் சிக்கிமுக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.

அஜித், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், தனது சொகுசு பைக்கில் வெளியே எங்காவது கிளம்பிவிடுவார். அப்படி அவர் பைக்கில் ரைடு செல்லும்போது, வழியில் இருக்கும் கடைகளில், சாப்பிடுவது, டீ குடிப்பது போன்ற அவர் ஈடுபடும் காரியங்கள் புகைப்படங்களாக வெளியாகி, ரசிகர்களைக் கவரும். அப்படித் தான் அவர் பைக் ரைடு சென்றதும் தெரிய வரும்.

அதேபோல்தான், தற்போதும், அவர் சிக்கிமுக்கு நேற்று பைக்கில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதேபோல், சிக்கிமில் இருந்து பைக்கிலேயே சென்னை திரும்பவும் முடிவு செய்துள்ளாராம். மொத்தம் 4,500 கி.மீ தூரம் பைக்கில் பயணம் செய்கிறார்..

‘வலிமை’ படத்தின் 10 சதவீத காட்சிகள் மட்டுமே எடுக்கவேண்டிய நிலையில், மீண்டும் 22ம் தேதிதான் படப்பிடிப்பு துவங்குமாம். இந்த நேரத்தைத்தான் அஜித் சிக்கிம் பயணத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :