• TRENDING | பர பர

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: காற்றில் பரவும் கரும்புகை! தவிக்கும் பொதுமக்கள்!





இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடிக்கத் தொடங்கி மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது.

பல இயற்கை அழிவுகளை அடிக்கடி சந்திக்கும் நாடுதான் இந்தோனேசியா. அதனாலேயே நெருப்பு வளையம் என்று இந்தோனேசியாவை அழைப்பர். இங்கு நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு போன்றவைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதால்தான் இந்த மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி அங்கு நடக்கிறது. மேலும் கிட்டத்தட்ட 130 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் சூழலிலும் உள்ளது.

இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள கிழக்கு ஜாவா மாகாணத்தில் சுமார் 3676 மீட்டர் உயரமுள்ள செமெரு எரிமலை தற்போது வெடிக்கத் தொடங்கி, அதிகமான புகையை வெளியேற்றி வருகிறது. இது 5.6 மீட்டர் உயரத்திற்கு கரும் சாம்பல் புகையையும் வெப்பத்தையும் உமிழ்கிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது, எரிமலை வெடித்துவரும் நிலையில், அருகிலுள்ள கிராம மக்களை வெளியேற்ற எந்த நடவடிக்கைகளும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, இங்கு 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் தாக்கியுள்ளதும், அதில் சுமார் 56 பேர் உயிரிழந்ததும், 826 பேர் படுகாயமடைந்தும் குறிப்பிடத்தக்கது.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :