• TRENDING | பர பர

நான் ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு போட்டேன்: அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன்!





பிக்பாஸ் சீசன் 4 நேற்று முடிவடைந்த நிலையில், தான் ரம்யா பாண்டியனுக்கு ஓட்டு போட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன், தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழகம் முழுவதும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் அக்கட்சியினரால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனும் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் வைகைச்செல்வன் பேஇச்ய்தாவது:

வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டிடிவி தினகரன். இது உலக அரசியல் வரலாற்றிலேயே நடக்காத ஒரு சம்பவம். இதேபோல், நடிகர் ரஜினிகாந்த்தும் வாடகை பாக்கி வைத்திருந்தார்; இறுதியில் தன்னிடம் வாடகை கேட்காதீர்கள், தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

தற்போது நடைபெற்று வந்த பிக்பாஸ் ஷோவில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள்கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ரம்யா பாண்டியனுக்கு, நான் 5 ஓட்டுகள் போட்டுள்ளேன். அவர் நல்ல பெண்ணாக தெரிந்ததால் பிழைத்து போகட்டும் என்று ஓட்டு போட்டேன். 3 கோடி, 4 கோடி ஓட்டுகள் விழ, பிக் பாஸ் ஒன்றும் சட்டமன்ற தேர்தல் இல்லை.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :