• TRENDING | பர பர

45,500 ஆண்டு பழைமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு!





இந்தோனேசியாவில், உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியமானது, 45,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஓவியமாகும்.

இந்தோனேசியாவின், தெற்கு சுலவெஸி பகுதியில் உள்ள குகை ஒன்றில்தான் இந்த குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில், இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் ஒரு வகை காட்டுப் பன்றிதான் வரையப்பட்டுள்ளது.

45,000 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தோனேசிய பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஒரு ஆதாரமாகவே இந்த ஓவியங்கள் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேராசிரியர் ஆடம் புரும் கூறும்போது, “தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பன்றி ஓவியம்தான், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழைமையான கலைப் படைப்பு. லீங் டெடோங்கே சுண்ணாம்புக் குகையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

சுண்ணாம்புக் குன்றுகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கிற்கு இடையே இந்த குகை இருக்கிறது. மழைக் காலத்தில் நீர் சூழ்ந்துகொள்வதால் வெயில் காலங்களில் மட்டுமே இந்த இடத்திற்கு வர முடியும். மேற்கத்தியர்கள் யாரும் இதுவரை இங்கு வந்ததே இல்லை என இங்கு வாழும் புகி சமூக மக்கள் கூறுகின்றனர்” என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :