• TRENDING | பர பர

இவர் ஓவியாவின் காதலரா!? வைரலாகும் புகைப்படம்!





பிரபல நடிகை ஓவியா ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இவர் ஓவியாவின் காதலரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மலையாளப் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகவானவர் ஓவியா. தமிழில் அவரது முதல் படம் ‘களவாணி’. அந்தப் படம் பரவலான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘கலகலப்பு’, ‘மூடர் கூடம்’, ‘மதயானைக் கூட்டம்’, உட்பட சில வெற்றிப் படங்களிலும் நடித்திருந்தார்.

அதன்பின், முதன்முதலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக களமிறங்கி ஓவியா மிகவும் பிரபலமானார். அதில் மிகவும் ஓப்பனாக அவர் நடந்துகொள்ளும் விதம் அனைவராலும் வெகுவாகக் கவரப்பட்டு பாராட்டப்பட்டார்.

அங்கு பிக்பாஸ் வீட்டில், சக போட்டியாளராக இருந்த ஆரவ், ஓவியா ஜோடியின் காதல் வேற லெவலாக இருந்தது. ஓவியாதான் டைட்டில் வின்னர் என்று அனைவரும் கொண்டாடும் அளவுக்கு தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியிருந்தார். பிக்பாஸ் முடிந்த பின், ஓவியாவைதான் ஆரவ் திருமணம் செய்யப்போகிறார் எனவும் இணையத்தில் வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ஆரவுக்கும் திருமணம் வேறு பெண்ணுடன் நடந்து முடிந்தது.

இந்நிலையில், தற்போது ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ஓவியா ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஓவியாவின் காதலர் இவர்தானா எனவும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Twitter link : https://twitter.com/OviyaaSweetz/status/1349628604146040832

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :