• JUST IN | சுட சுட

செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் ‘புதுப்பேட்டை-2’?!





இப்போது கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் `எஸ்12` திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று இரவு 7.10 மணிக்கு

வெளியாகும் என்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் அவரது தம்பி தனுஷ் நடிக்கும் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் திரைப்படம் என்றும், இன்னொன்று `ஆயிரத்தில் ஒருவன்` படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியானது

யுவன் சங்கர் ராஜா இசையில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படம் `புதுப்பேட்டை` படத்தின் இரண்டாம் பாகமாக

இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :