மிளகு ரசம் அல்லது பூண்டு ரசம் குடித்தால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளது. மேலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்தது.
இந்நிலையில், மிளகு ரசம், அல்லது பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் செத்து விடும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.
Comments
கேஆர்எஸ் . சம்பத். says :
அவரவர்கள் உடல் வாகுவைப் பொறுத்தது. எல்லோருக்கும் பொருந்துவது கஷ்டம். சிலருக்கு பயனளிக்கலாம்.