• JUST IN | சுட சுட

கடந்த 72 மணி நேரத்தில் டெலிகிராம் செயலிக்கு மாறிய 2.5 கோடி பயனாளர்கள்!





வாட்ஸ்அப் அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து பலர் வாட்ஸ்அப்-பிலிருந்து வெளியேறி தற்போது மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, மாற்று செயலிகளான சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு பயனாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் புதியதாக டெலிகிராமில் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :