தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
,
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொள்பவர்கள், 2-வது டோஸ் போட்டுக்கொள்ளும் வரை, அதாவது சுமார் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும், அவ்வாறு யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்..

Comments