• JUST IN | சுட சுட

நான் களமிறங்க தயார்: சேவாக் அதிரடி!!





இந்திய வீரர்கள் ஆறு பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் ‘’நான் களம் இறங்க தயார்’’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதனால் நான்காவது போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் பும்ரா, ஷமி, ராகுல், உமேஷ் யாதவ், ஜடேஜா, விஹாரி ஆகியோர் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தான் களத்தில் இறங்கி விளையாட தயார் என தெரிவித்துள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில்,

‘’இந்திய அணிக்காக மீண்டும் களம் இறங்க தயாராக உள்ளேன், ஓய்வை கூட ரத்து செய்து விடுகிறேன், மற்றதையெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’’ என அவர் கூறியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :