• JUST IN | சுட சுட

வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்!





மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாடினர்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 50ஆவது நாளை எட்டியுள்ளது. மூன்று சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

மத்திய அரசு மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடவோம் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் இன்று போகி பண்டிகை என்பதால் வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலும், புதுச்சேரியிலும் வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மத்திய அரசு அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :