• JUST IN | சுட சுட

அடடே! தமிழ் எழுத்துக்களுடன் கூடிய ஸ்கூட்டர் அறிமுகம்!!





தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஸ்கூட்டி பெப் பிளஸ் இருசக்கர வாகனத்தில் தமிழ் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.

முதல் முறையாக தமிழ் எழுத்துகளில் வாகனத்தின் மாடல் பெயரை வடிவமைத்து அந்நிறுவனத்தினர் உருவாக்கியுள்ளனர். இவ்வாறு தமிழில் பெயர் அச்சிடுவது இரு சக்கர வாகனத் தொழில்துறையில் இதுவே முதல் முறை.

இந்தப் புதிய மாடல் கூடுதல் செயல் திறன் அளிப்பதுடன் 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் அளிப்பதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் விலை ரூ .56,085. இந்த மாடல் குறுகிய காலத்துக்கு மட்டுமே விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் மாடல் தயாரிப்புக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளிப்பார்கள் என்ற டிவிஎஸ் நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதன் இ.டி.எஃப்ஐ இகோ திரஸ்ட் என்ஜின் வேகம் அளிப்பதுடன், நீண்ட கால உழைப்பு, தங்கு தடையில்லாத செயல்பாடு மற்றும் சொகுசான சவாரியை உறுதி செய்யும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :