• TRENDING | பர பர

சமோசா என்ன செயற்கைக்கோளா? விண்ணிற்கு அனுப்பப்பட்ட சமோசா!





இங்கிலாந்தில் உள்ள ஸ்ட்ரீட் புட் உணவகம் ஒன்றின் உரிமையாளர் சமோசா ஒன்றை விண்ணில் செலுத்தி பிரமிப்பை ஏற்படுத்தி உள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

சாய் வல்லா என்ற இந்தியன் ஸ்ட்ரீட் புட் உணவகம் இங்கிலாந்தில் உள்ளது. இதன் உரிமையாளர் நிராஜ் காதர். இவர் சில நாட்களுக்கு முன் ‘ஒருமுறையேனும் சமோசாவை விண்வெளிக்கு அனுப்புவேன்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

பின்னாளில் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு வரவே, ஹீலியம் பலூனைப் பயன்படுத்தி பிரியமான சமோசா சிற்றுண்டியை விண்வெளிக்கு செலுத்தினார். அதை சரியாக செய்துமுடிக்க மூன்று முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதல் முயற்சியில், ஹீலியம் பலூன்கள் அவரது கைகளைவிட்டு நழுவிச் சென்றது. பின், இரண்டாவது முயற்சி போதுமான அளவு ஹீலியம் இல்லை. மீண்டும் விடாமுயற்சியில் இறங்கிய அவர் அதை சிறப்பாக செய்து முடித்து தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார்.

இதுசம்பந்தப்பட்ட வீடியோ, யூ டியூப்பில் பகிரப்பட்டுள்ளது. அதில், நிராஜ் காதர் மற்றும் அவரது நண்பர்கள் சமோசாவை விண்வெளியில் ஏவுவதைக் காட்டுகிறது.

அந்த சமோசா சிற்றுண்டியுடன் ஒரு Go Pro கேமரா மற்றும் ஜி.பி.எஸ் டிராக்கருடன் பொருத்தி, வானிலை பலூனுடன் இணைத்தபடி, செலுத்துவதை வெளியிட்டனர். அது வளிமண்டலத்தை நோக்கி பயணிக்கும் காட்சி அனைத்தும் அந்த வீடியோவில் பதிவானது.

ஆரம்பத்தில் செலுத்தியபோது, ஜிபிஎஸ் தவறாக செயல்பட்டதாம். பின்னர், பலூன் நல்லமுறையில் விண்வெளியில் உயரே பறந்து சென்றுள்ளது. அதன்பின் மறுநாள் அது பிரான்சில் விழுந்துள்ளது தெரிய வந்ததுள்ளது.

சமோசா அடைந்த இலக்கு சிறிதோ, பெரிதோ, ஆனால் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.

Youtube link : https://www.youtube.com/watch?v=I1UlEa7m_zs&feature=emb_title


Comments

கேஆர்எஸ். சம்பத் says :

ரியலி ஸ்வாரஸ்யமான முயற்சி . அடுத்த அதிர்ஷ்டம் உருளைக் கிழங்கு போண்டாவுக்கு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :