• TRENDING | பர பர

ஆரவாரமாக ரிலீஸானது ‘மாஸ்டர்’! பட்டையைக் கிளப்பும் பொது விமர்சனம்!





பொங்கல் வெளியீடாக, தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ரிலீசானது.

தளபதி படம் என்றாலே படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய தினமே, திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் கூடிவிடும். அதுவும் போன வருடமே வரவேண்டிய தளபதி படமாயிற்றே, சொல்லவா வேண்டும்?!. திரையரங்குகள் இரவு முதலே ரசிகர்களின் ஆரவாரத்தில் நனைய ஆரம்பித்தது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என ரசிகர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.

அதிகாலை 3 மணியளவில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ரசிகர்கள் திரையரங்கிற்குள் அனுப்பப்பட, 50 சதவீத இருக்கைகளுடன் ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டது.

‘மாஸ்டர்’ படம் குறித்து சமூக வலைதளங்களில் பார்க்கப்படுகையில், லோகேஷ் கனகராஜ் படம் என்று கூறுவதைவிட விஜய்க்கான படமாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யும், விஜய் சேதுபதியும் போட்டி போட்டு நடித்துள்ளனர். படத்தில் தல மற்றும் சூர்யா ரெஃபரன்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படம் பர்ஸ்ட் ஆஃப் வேற லெவலில் இருப்பதாகவும், செகண்ட் ஆஃப் சற்று இளைப்பாறிச் செல்வதாகவும் கூறியுள்ளனர். சற்று லென்த்தான காட்சிகள் இருப்பதாகவும், அதை ஷார்ட் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும் என்று கூறியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் முந்தைய படங்களில் இருந்து சற்றுவிலகி, விஜய்க்கான கமர்ஷியல் பாணியில் வெற்றிபெற்றுள்ளார். அனிருத் இசையை சொல்லவே வேண்டாம். ஏற்கெனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டானது நினைவிருக்கும். விஜய் சேதுபதி செமயாக மிரட்டியுள்ளார்.

சில குறைகள் என்று பார்க்கும்போது, படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் ஏற்கெனவே பார்த்த காட்சிகளை நினைவு படுத்தும்விதமாகவும், சில காட்சிகள் சற்று லென்த்தான காட்சிகளாகவும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், விஜய், விஜய் சேதுபதி இவர்களின் நடிப்பு ரசிகர்களுக்குத் தீனி என்பதில் சந்தேகமில்லை. படத்தின் ஹைலைட்டே கிளைமாக்ஸ் காட்சி தான் என்று பலரும் கூறியுள்ளனர். தளபதி படம்னாலே அது வேற லெவல்தான் என்ற பாணியில் இதுவும் ஹிட் அடிக்கும் என்று நம்பலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :