• SPARKLES | மினுமினு

நரகத்தின் வாயிற்படி - இந்த மர்ம நகரம்?!


கட்டுரை: ஷைனி





உலகின் மர்மமான பல இடங்களில் ஒன்று - துருக்கியின் பண்டைய நகரமான ஹெராபோலிஸ் என்கிற நகரம்! அங்குள்ள மிகவும் பழமையான ஒரு கோயில் `நரகத்தின் வாயிற்படி’ என்றே அழக்கப்படுகிறது. அந்த கோயிலுக்கு உள்ளேயோ அல்லது அந்த கோயிலுக்கு அருகே யார் சென்றாலும் மீண்டும் ஒருபோதும் திரும்பி வருவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலைக் கடந்து செல்லும் மனிதர்கள் அல்லது மிருகங்கள் யாருமே உயிர் பிழைப்பதில்லையாம்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இடம் மர்மமாகவே இருந்தது, ஏனெனில் இங்கு வந்தவர்கள் கிரேக்க கடவுளின் விஷ சுவாசத்தால் இறந்து விடுகிறார்கள் என்று மக்கள் நம்பினர். அதனால் இக்கோயிலை ’நரகத்தின் வாயில்` என்று அழைக்கத் தொடங்கினர். கிரேக்க மற்றும் ரோமானிய காலங்களில்கூட, மக்கள் மரண பயம் காரணமாக இக்கோயில் அருகில் செல்ல அஞ்சினர் என்று கூறப்படுகிறது.

இப்போது இந்த கோயிலின் மர்மம் பற்றிய முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளது. மக்களின் மர்மமான மரணங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். இக்கோயிலுக்கு அடியிலிருந்து விஷ கார்பன் டை ஆக்சைடு வாயு தொடர்ந்து வெளியேறி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாகவே, இந்த வழியாகச் செல்லும் மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் இறக்கின்றன என்பது கண்டறியப் பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, கோயிலுக்கு கீழே உள்ள குகையில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சு வாயுவின் அளவு 91% அதிகமாக இருப்பதால், அங்கு செல்பவர்கள் உடனடி மரணமடைகிறார்களாம்! மேலும், இந்த கோயில் குகைக்குள்ளிருந்து வெளிப்படும் நீராவியானது பூச்சிகள் மற்றும் விலங்குகள் மற்றும் பறவைகளை கொல்கிறது. இந்த நீராவி இப்பகுதி பனிமூட்டமாகவும் அடர்த்தியாகவும் இருக்கிறது, அதனால் வழிதவறிச் சென்று மூச்சுடைத்து இறக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :