• SPARKLES | மினுமினு

அம்மாவின் ஜோசியம்!


சிறுகதை: ஸ்ரீநிவாஸ், சென்னை.

நான் முதலில் திருநாவை பார்த்தது ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்டில்! நான் ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து நகரின் பிரதான கல்லூரியில் அன்று புதுமுக வகுப்பில் சேர வேண்டும்.

பஸ் ஸ்டாண்டில் என்னை இறக்கிவிட்ட அப்பா ‘மெயின் கார்ட் பஸ் உனக்கு தெரியுமில்லே..? அங்கிருந்து நாலடி நடைதான்..’ என்று சொல்லிவிட்டு, விருட்டென்று சைக்கிளில் ஏறிப் பறந்தார்.

அதே பஸ் ஸ்டாப்பில்தான் திருநாவும் நின்றிருந்தான். நீல முழுக்கை சட்டை, தங்க நிற பாண்ட் காலில் சிங்கப்பூர் செருப்பு! மிரண்ட கண்ணுடன் ’‘மெயின் கார்ட் பஸ் வருங்களா?’’ என்று கேட்டான்.

நான் தலையசைத்து, ‘’ம்.. வரும்..நானும் அங்கேதான் போறேன்”

’’அங்கே கல்லூரியில் சேர்ந்திருக்கேன், இன்று முதல் நாள்" என்றவனிடம் பெயர் கேட்டேன்.

’’திருநாவுக்கரசு. எல்லாரும் திருநான்னு கூப்பிடுவாங்க."

நானும் என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டேன். நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு!

அவனுக்கு உத்தமர் கோவில் பக்கத்தில் ஒரு கிராமம். எட்டாவதுக்கு மேல் யாரும் தாண்டாத குடும்பத்தில் படிக்க வேண்டும் என்ற வெறியுடன் இதோ கல்லூரியில் அடி வைத்திருக்கின்றான். எங்கள் குடும்பமும் சொல்லிகொள்ளும்படி ஒன்றுமில்லை! சங்கீதம், மூன்று சீட்டு, நாடகம் என காணிகளை தாத்தா கரைக்க, பெருங்காய டப்பாவாக எங்கள் குடும்பம். புராதன வீடும் அப்பாவின் தாலுகா ஆபீஸ் கிளார்க் உத்தியோகமும் எங்கள் இன்றைய சொத்து.

ஒருவழியாக காலேஜ் வந்து சேர்ந்தோம்.

கல்லூரியில் -ஆறடி இரண்டங்குல உயரமும் அதற்கேற்ற பருமனோடு பரங்கிப்பழ நிறத்தில் முதல்வர் புது மாணவர்களை வரவேற்க ‘யாரும் தமிழிலேயே பேச மாட்டாங்களா? ஒண்ணுமே புரியலை’ என்றான் திருநா.

‘போகப் போக புரியும். நானும் ஹெல்ப் பண்றேன்.’’ என்று நான் சொல்ல, அதன் பின்னர் பசை வைத்தாற்போல் என்னோடு ஒட்டிக் கொண்டான். பின்னர் வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து திண்ணையில் கூசிக் கொண்டே உட்கார்ந்து பாடங்களில் சந்தேகம் நிவர்த்தி செய்து கொள்வான்.

அவ்வப்போது காவிரிப் படித்துறைக்குப் போவோம். பாலத்தில் ஜில்லென்று வரும் காற்று தலை முடியை பறக்கவிட படியில் நின்று கொண்டு ஆற்றோரத்தில் டாடா காட்டும் துணிகளை நான் ரசிப்பேன். திருநா ஆற்றின் அருகேகூட வர மாட்டான்.

மூன்று மாதத்திற்குப் பின்பு உண்மைக்காரணம் தெரிந்தது.

‘’ எனக்கு தண்ணீரில் கண்டம் இருக்காம். என் சோசியத்தில் சொன்னாங்களாம். அதனால், அம்மா என் கிட்டே கை அடித்து சத்தியம் வாங்கியிருக்காங்க.. தண்ணிகிட்டாகூட போகக் கூடாதுனு” என்றான்.

புதுமுக வகுப்பில் இருவரும் முதல் வகுப்பில் தேற, நான் பி.எஸ்.சி. ரசாயனமும் திருநா சென்னையில் பி.ஈ.யும் சேர்ந்தோம். நான் டிகிரி முடித்ததும், தூரத்து சொந்தக்காரர் உபயத்தில் டில்லியில் ஏ.ஜி.ஆபிஸில் வேலை எனக்கு கிளார்க் வேலை கிடைத்தது.

அஜ்மல் கான் ரோட்டில் ஆபீஸ்.. மூன்று மாதத்தில் ஹிந்தி கற்று ரிவோலியில் மாதம் ஒரு படம், தமிழ்சங்கத்தில் கச்சேரி என காலம் உருண்டோடியது. திருநா தான் பட்டாளத்தில் சேரப்போவதாக கடிதம் எழுதியிருந்தான்.

அடுத்த மூன்றாண்டுகளில் ஜெய்ப்பூர், ராஞ்சி என சக்கரம் கட்டி நான் சுழல, அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறக்க, திருநாவும் தன் திருமண பத்திரிகையை அனுப்பியிருந்தும் லீவு கிடைக்காததால் செல்ல முடியவில்லை.

அப்பாவின் மரணச் செய்தி திடீரென்று இடியாய் இறங்க, செக்ஷன் ஆபீசரை கெஞ்சி ஒரு மாதம் லீவில் ஸ்ரீரங்கம் சென்றோம்

பதிமூன்று நாள் காரியம் முடித்து, உறவினர் விடை பெற, எஞ்சியது புகை மணமும் அப்பாவின் நினைவுகளுமே. கூடத்தில் மனைவியும் குழந்தைகளும் உறங்க, அம்மாவும் நானும் சமையல் கட்டில்!

‘வீடு முழுக்க மனுஷங்க. என்னால் அழக்கூட முடியல்லே’ புடைவைத்தலைப்பை வாயில் பொத்திக் கொண்டு அழுதாள் அம்மா.

அப்போது வாசக்கதவு தட்டப்பட்டது. திறந்தால், திருநா நின்றிருந்தான்.

‘என்னடா? இந்த அகாலத்திலே வந்திருக்கே?’- கேட்டேன்.

‘சாரி. இன்னிக்கு காலையிலேதான் ஸ்ரீரங்கம் வந்தேன். விஷயம் கேட்டு, நாமக்கல் போயிட்டு செல்வியையும் கூட்டியாந்தேன். வீட்டுக்கு வர ராத்திரி ஒன்பது மணி ஆயிடுச்சு! நாளைக்கே மெட்ராஸ் கிளம்பியாகணும். அதான் இப்பவே பாத்துடலாம்னு ஓடியாந்தேன்’’ என்ற திருநா,

பின்னாடி ஒளிந்திருக்கும் தன் மனைவியை முன்னுக்கு வரச் செய்தான். ‘’செல்வி, உன் புருஷன் பெரிய ஆபீஸர்னு பெருமை அடிச்சுப்பியே, எல்லாம் இவனால்தான். இவன் மட்டும் இல்லனா ஒரே மாசத்தில் காலேஜிலேருந்து ஓடியிருப்பேன்’’ என்றான் பெருமையுடன்! பின்னர் பழங்கதை பேசி அவன் கிளம்பும்போது இரவு 2 மணி.

‘’இந்த ராத்திரில கிளம்பணுமா? விடிஞ்சதும் போ’’ என்றாள் அம்மா. ‘’இல்லேம்மா.. இப்பவே போயாகணும்’’ என்று கிளம்பி வாசலுக்கு வந்தான்.

வாசலில் புத்தம்புது சேடக் ஸ்கூட்டர் நின்றிருந்தது. ‘’ஆர்மி கோட்டால கிடைச்சது. இல்லன்னா இந்த ஸ்கூட்டருக்கு புக் பண்ணி 15 வருஷம் காத்திருக்கணும்’’ என்றான். ஏனோ அவனை கலாட்டா செய்ய தோன்றியது.

’‘செல்வி, இப்பவேணா உன் புருஷன் பெரிய ராணுவ வீரன். நாட்டைக் காக்கிறான். ஆனால், காலேஜ் படிக்கிறப்போ எவ்வளவு பயந்தாங்கொள்ளி தெரியுமா? காவிரி ஆத்து பக்கம்கூட வர மட்டான். ஃபேன் அடியில் உட்கார மாட்டான். பஸ் படியில் நிற்க மாட்டான். கேட்டால் சோசியம்..கண்டம்னு சொல்வான்’’ என்று நான் சொல்ல,

‘’அட.. நீ வேற! .எங்கம்மா என்னை அப்படி சொல்லி நல்லா ஏமாத்தியிருக்காங்க. பத்து வயசிலேயே நானும் பக்கத்து வீட்டுப் பையனும் காவேரிலே ரயிலேருந்து தூக்கி எரியற சில்லறையை மூழ்கி எடுத்து டெண்டுல எம்.ஜி.ஆர். சினிமா பார்ப்போம். அதை யாரோ பாத்துட்டு வீட்லே சொல்லிட்டாங்க. அதான் காவிரி ஆத்துப் பக்கமே போக விடாதபடி எங்கம்மா சோசியம், கண்டம்னு சொல்லி என்கிட்ட கையடிச்சு சத்தியம் வாங்கிட்டாங்க!. சோசியமாவது மண்ணாவது.’’

- என்று சொல்லிவிட்டு, மனைவி பின்சீட்டில் அமர, புத்தம்புது ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பினான் திருநா. வண்டி தெற்கு வாசல் திரும்பி, டமார்!

Comments

கேஆர்எஸ். சம்பத். says :

அமர்க்களமா ஆரம்பிச்சு இப்பிடி டமார்-நு முடிசிட்டீங்களே ஸ்ரீநிவாஸ் சார்................

Shyamala Ranganathan says :

அருமையாக ஆரம்பித்து சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில (சுஜாதா சார் கதை போல சூப்பராக நகர்கையில்) சப் பென முடிந்து விட்டதே

Guest says :

Superb Dr

Dr r mani says :

Abrupt and unusual ending.

Narayanakumar. T S says :

Start was interesting, flow was excellent, style was unique and end unexpected. Great job, Srinivas.

S.R.Viji says :

Everyone will expect him to meet with an accident....and it happens! You should have allowed him to return safely.

Dr M B Sambathkumar says :

Myself and Srini are good friends for the past 50 years and hotcore fans of Sujatha. Sujatha`s influence is very much seen in the story.

Col.S.Krishnan says :

ஆரம்பம் அற்புதம். நடுவில் சுவாரஸ்யம் மிளிர்கிறது. முடிப்பதில் என் இவ்வளவு அவசரம்? நண்பர் ஒருவர் கூறிய படி சுஜாதா இங்கங்கு வெளிப்படுகிறார். கடைசி வரை படிக்காமல் நிறுத்த முடியவில்லை. அது ஆசிர்யரின் எழத்து வன்மை. அடுத்தது எப்போது? விரைவில் வரட்டும்

Pattabi Raman S says :

Expect the Unexpected!!

Mala says :

அருமையான கதைக்கரு.அழகாக சொல்லி இருக்கிறார்.அவர் அபிமான `சுஜாதா`வின் எழுத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.` டாக்டர் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் கைவசம் இன்னொரு தொழில் தயாராக இருக்கிறது ` ,Dr.Srinivas.மேலும் உம்முடைய படைப்புக்கள் பிரசாரமாவதற்கு என் best wishes

Dr V.R.Vijayaraghavan says :

டமார் என்ற சத்தம் விபத்துக்கு அறிகுறியாக இருக்கலாம். ஆனால் விபத்தில் மரணம் இருக்கும் என்று நினைக்க தேவையில்லை. டமார் சத்தம் என்றாலே விபத்து என்று அர்த்தம் இல்லை.

G Rangarajan says :

மிக அருமையா இருக்கு கதை. மேலும் மேலும் படிக்க ஆசையாக இருக்கிறது. தொட௫ம் என்று கூறி இருக்கலாம். டமார் என்பதற்கு பதிலாக.

KSS says :

ஒரு பக்க கதைதான் - ஆங்கில கதை: கிட்ஸ் கதைகள் போல இல்லை. மகிழ்ச்சியுடன் அடியேனுக்கு பிடித்து இருக்கிறது – கே எஸ் எஸ்

Kalyani sridharan says :

சூப்பர் யதார்த்த நடை.ஓவியம் அருமை. முடிவு அவரவர் விருப்பம் வளர்க உம் கவிதை கதை பணி

Delhi Raju says :

Great piece of writing

Dr V.R. Vijayaraghavan says :

I have already sent the comment. What i feel, we must have positive thinking only . very nice story. Making us to think differently .SRINI proud of you.

KSRavishanksr says :

Shades of Sujata expected end I thought of drowning while in army activities or flood Good attempt

KSRavishanksr says :

Shades of Sujata expected end I thought of drowning while in army activities or flood Good attempt

KSRavishanksr says :

Shades of Sujata expected end I thought of drowning while in army activities or flood Good attempt

வெங்கி says :

சுவாரஸ்யமான கதை சுஜாதா பாணியில்! முடிவில் suspense!! சபாஷ் ஸ்ரீனிவாஸ்

Balaji says :

Good Story - is it maiden?

Guru.Alagarasan says :

அய்யா உண்மையான நன்றியுள்ள நட்பு எந்தவொரு பெரிய இடைவெளிக்குப் பிறகும் இணையும் என்பதை நிறுவி உள்ளீர். திருநாவிற்கு கண்டம் இல்லை, கண்டம் என்பதே பயமுறுத்தல்தான் என படிப்நிபோரை நினைக்க வைத்து, டமார் என முடித்து மனித வாழ்வு நிரந்தரமில்லாத்து என்பதை உணர வைத்துள்ளீர். உண்மை கதைபோல் உள்ளது, கதை சொன்ன விதம் அருமை, சிறப்பு.

Rukmini R says :

Nice story with an unexpected ending .Congrats !

S.Rammohan says :

ஸ்ரீ நிவாஸ் கவிதையில்தான் கவிஞன் என நினைத்தைன். கதையிலும் தனித்துவம் காட்டி டாக்டர் கவிஞர்/எழுத்தாளர் என தோலுரித்து (skin special dr) அனுமான் மார்பை கிழித்து பக்தியை காட்டிய நிலையாக தன் திறமை தனில் சிவா கலா வல்லவர் கவிதை கதை இரண்டர கலக்க மனதை சதை ஒன்றாக ஆக்க நட்பதை கருவாக கொண்டு ஈர்ப்பதை உரமாக திரண்டு படிப்பதை திரமாக ஆக்க உன் பாதை தெடராக மணக்க

ராம் மோகன் says :

Correction நினைத்தேன் சகலகலா வல்லவர்

Mahesh Kannappan Iyer says :

Super Sir. I vaguely remember first few sentence (intro) are used as it is in one of Sujatha`s story. Please keep writing more but only in the great Sujatha`s style. I would say Sujatha is still living with us. Your stories are one form of his representation

Vasudevan says :

Valarga ungal ezuthu pani. Next eppo

T.V.SESHADRI says :

The story was flowing like a river but the end is not suiting it

Rathnamala says :

Nice story. Didn`t expect it to end so fast. Best wishes and expecting the next story

Nandu says :

Srini, Congratulation on this publication. Another feather in you cap, another hidden talent comes to light. If your intention was to shock your audience, you certainly achieved it. Your poems have a perspective that is unique, a flow that provokes thought and concludes with a message or observation that makes the readers think. Here you`re playing with the scale of time, lulling suspicion and added tragedy at a moment when a reprieve was anticipated. A nod towards premonition grates against a mother`s warning, compelling an obsessive compulsive behaviour of a lifetime, only to be mocked by fate not unlike Parikshit of Mahabharata for a slanderous utterance. Is life all random or is it predetermined, the title would suggest the latter and i can hear Srini chuckle as he reads the comments and thinks," I told you so"

G Rangarajan says :

மிக அருமையா இருக்கு கதை. மேலும் மேலும் படிக்க ஆசையாக இருக்கிறது. தொட௫ம் என்று கூறி இருக்கலாம். டமார் என்பதற்கு பதிலாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :