• TRENDING | பர பர

பெண்குழந்தைக்கு அப்பாவான விராட் கோலி! மகிழ்ச்சியில் ட்வீட்!





இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை, அவரது ட்விட்டர் பக்கத்தில் கோலி உறுதி செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர நாயகன் கோலி, நடிகை அனுஷ்கா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக கடந்தாண்டு தனது ட்வீட்டின் மூலம் உலகுக்கு அறிவித்திருந்தார். அதேசமயம், தங்களுக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இச்சூழ்நிலையில்தான், குழந்தை பிறப்பின் காரணமாக மனைவியுடன் இருப்பதற்காகவே, ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி, கோலி இந்தியா வந்தடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

கோலி இந்த அறிவிப்பை வெளியிட்டபோது பலரும் நாட்டிற்காக விளையாடமல், இந்தியா வந்துவிட்டதாக திட்டி தீர்த்தனர். நேற்றுதான் சிட்னியில் டெஸ்ட் போட்டி நடந்துமுடிந்தது. ஒருவேளை அவர் போட்டியில் இருந்தால் கவனம் செலுத்தியிருக்க முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான்.

இந்நிலையில், நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்குப் இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை உங்களிடம் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அனுஷ்காவும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். எங்களின் உணர்வுகளை நீங்கள் மதிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கும் உணர்வுகள் இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில் ரசிகர்களும், சக வீரர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :