• TRENDING | பர பர

அதிர்ச்சி! இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம்!





ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, திரையில் வெளிவரத் தயாராகி இருந்த நிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் இணையத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரம்மாண்ட கூட்டணியான தளபதி விஜய், மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. சென்ற வருடமே இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாவால், தியேட்டர் முதற்கொண்டு அனைத்தும் முடங்கிப்போனதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

ஓடிடியில் விஜய் சேதுபதியின் ‘க/பெ. ரணசிங்கம்’, சூர்யாவின் ‘சூரரை போற்று’, மாதவனின் ‘மாறா’ உட்பட பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றாலும், விஜய் படத்தை தியேட்டரில் வெளியிடவே படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ரசிகர்களும் கரகோஷத்துடன் தியேட்டரிலேயே தளபதி விஜய்யின் படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்திருந்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்து, ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, நாளை தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்ப்பட்டது.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகவிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படக் காட்சிகள் நேற்று இரவு இணையதளத்தில் வெளியானது.

இதுபற்றி, லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், ``மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். இவை அனைத்து நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான்! அதனால் இணையத்தில் கசிந்த படக்காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :