• SPARKLES | மினுமினு

உயரம் கூட்டும் ஆபரேஷன்! இளைஞரிடையே பிரபலம்?


கட்டுரை: ஷைனி





பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பரவலாக அறிந்திருப்பார்கள்! ஆனால், உடல் உயரத்தை அதிகரிக்கச் செய்யும் அறுவை சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?. தற்போது இளைஞர்களிடையே இந்த அறுவை சிகிச்சை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. உயரத்தை சில இன்ச்சு அதிகரிக்கப்பதற்காக பல லட்சங்களை செலவழிக்கத் தயங்குவதில்லை!

புளோரிடாவை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் கெவின் 2018-ம் ஆண்டில் ’’தி லிம்ப் பிளாஸ்ட்எக்ஸ் இன்ஸ்டிடியூட்’’ என்று சொந்தமாக மருத்துவமனை ஒன்றைத் துவங்கியுள்ளார். தற்போதுவரை இந்த மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்டோருக்கு உயரும் கூட்டும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாம்..

இதுபற்றி மருத்துவர் கெவின் சொல்லும்போது, "தன்னிடம் வரும் பல இளைஞர்களும் உயரக்குறைவை பெரிய பிரச்சினையாகக் கருதுகின்றனர். சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த குறையை நிவர்த்தி செய்ய முடிந்தால், அது தங்கள் வாழ்க்கையை நிறைவாக்குவதாக எண்ணுகின்றனர். பெரும்பாலும் இந்த அறுவை சிகிச்சைக்கு ஆண்களே வருகின்றனர். ஒரு சில பெண்களும் விதிவிலக்கல்ல" என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கெவினுடன் சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர்

இந்த உயரம் அதிகரிக்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் பிரபலமடைந்திருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பே இது நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குழந்தைகளுக்கான எலும்பு அறுவை சிகிச்சை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த வகை சிகிச்சை முறையில் எலும்புகளுக்கு இடையே திசுக்களைச் சொருகுவது, மற்றும் நகங்கள் மற்றும் எலும்பின் திருகு பகுதியை நீட்டிப்பதன் மூலம் ஒருவரின் உயரம் அதிகரிக்கப்படுகிறது. இராணுவ வீரர்கள், விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், கெவின் இந்த சிகிச்சையை உயரத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார். அறுவை சிகிச்சைக்கு 2 மணி நேரத்திற்கு முன் அந்த நபருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்துக்குப் பின் நடக்கத் துவங்கலாமாம். அச்சமயத்தில், அவர்கள் தாம் முன்பு இருந்ததை விட ஐந்து அல்லது 6 அங்குலம் வரை உயரம் கூடியிருப்பர். ஆபரேஷன் முடிந்த ஒரு சில வாரங்கள் அதிகளவு கால்களுக்கு களைப்பு ஏற்படாமல் பார்த்துகொண்டால் போதும். வழக்கமான நடைமுறைக்கு வந்து விடலாம்’’ என்கிறார் டாக்டர். கெவின்.

எலும்பு அறுவை சிகிச்சைக்கான படம்

இந்த அறுவை சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் 55 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவாகும். இதில் அறுவைசிகிச்சைக்கு முன் வழங்கப்படும் உணவுகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு ஆகியவையும் அடங்கும்.

ஆனால், இந்த அறூவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சிலருக்கு பின்விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆப்ரேஷன் மேற்கொண்டவர்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் திறனை இழக்கிறார். மேலும், தினப்படி வாழ்க்கையிலும் வேகமாகச் செயல்படுவது மிகவும் சிரமம் என்று சொல்லப்படுகிறது.. ஆனால், ஜிமிற்கு செல்வது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை.


Comments

says :

says :

says :

Bhamathynarayanan says :

it seems to be a risky challenge.. moreover too costly..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :