• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

பதினெட்டாம் பெருக்கு!


அமரர் கல்கி

வீரநாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்து கிராமங்க ளிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்துகொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புதிய ஆடைகள் அணிந்து, விதவித மான அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல் களைத் தாழம்பூ, செவ்வந்திப் பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக்கொண்ட பலர் குடும்பங்குடும்பமாக வந்திருந்தார் கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்றுகொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக்கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடிவருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக் காரர்கள் தங்கள் காதலிகள் கூந்தலில் சூடியிருந்த மலர்களை, அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடிவருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப் பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும் சிந்தும் பாடினார்கள். மிகுந்த குதூகலத்துடன் பாடினார்கள்.

வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

- ‘பொன்னியின் செல்வன்’ முதல் அத்தியா

Comments

கேஆர்எஸ். சம்பத். says :

அண்டா பாயசம்-விளிம்பில் ஒட்டியிருந்ததை எடுத்து சுவைத்தது போல இருந்தது.

says :

says :

says :

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :