• JUST IN | சுட சுட

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!





இன்று பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலை மற்றும் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

தமிழ்நாட்டை அன்பால் ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரிய மாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கு எதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!

-இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :