• தினம் ஒரு வடை

தோல் கருப்பு உளுந்து வடை


உஷா முத்துராமன்

தேவையானவை:-

கருப்பு உளுந்து - 2 கப்

மிளகாய் வற்றல்- 2.

உப்பு - சிறிதளவு

நெய் -சிறிதளவு

எண்ணெய் – பொரிக்க.

பெருங்காயம் – சிறிதளவு.

கருவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை-

கருப்பு தோல் உளுந்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் கருப்பு உளுந்து மிளகாய் வற்றல் உப்பு பெருங்காயம் எல்லாவற்றையும் போட்டு ஒன்றிரண்டாக கெட்டியாக அரைத்து எடுக்கவும். இரண்டு ஸ்பூன் நெய் சிறிதளவு கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு அரைத்த மாவுடன் கெட்டியாக கலந்து சிறிது சிறிதாக வட்டமாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு பொரித்து எடுத்தால் மிகவும் அருமையான கருப்பு உளுந்துவடை தயார். இவற்றை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தினால் மிகவும் விசேஷமானது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :