• தினம் ஒரு வடை

சென்னா கிரிஸ்ப்பி வடை.


ஷெண்பகம் பாண்டியன், சத்துவாச்சாரி.

கறுப்பு மூக்கு கடலை கரையும் நார்சத்துக்கள் கொண்டது.கொழுப்பை குறைக்கும் என்பதால் இரத்தக்குழாய் அடைப்புகள்,பக்கவாதம் ,சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் என்பதோடு இரும்பு கனிமச்சத்து நிறைந்ததாக உள்ளது.

செய்முறை:

ஒரு கப் மூக்கு கடலையை பத்துமணிநேரம் ஊறவைக்கவும். அத்துடன் காய்ந்தமிளகாய்,பூண்டு பற்கள் நான்கைந்து, சிறு துண்டு இஞ்சி, சோம்பு சிறிது உப்பு சேர்த்து ரவை பதத்திற்க்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். மாவு ஒன்று சேர்ந்து கலந்துவர பைண்டிங்கிற்காக ஒரு கரண்டியளவு ஏதாவது ஒரு மாவு (அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு) சேர்த்து மெல்லிய வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். தக்காளி சாஸ்,தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :