• தினம் ஒரு வடை

சாமை மதூர் வடை


மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

தேவையானவை :

சாமைஅரிசி-1/4கப்,

பதப்படுத்தப்பட்ட ப அரிசி மாவு-1கப்,

லேசாக வறுத்த சின்ன வெள்ளை ரவை-1/4கப்,

இலேசாக வறுத்த கடலைமாவு -1டேபிள்ஸ்பூன்,

இலேசாக வறுத்த பொட்டுக்கடலை-3டேபிள்ஸ்பூன்,

நறுக்கிய வெங்காயம்-2

,நறுக்கிய ப மிளகாய்-4,

உப்பு- சுவைக்கேற்ப

எண்ணெய்-பொரிக்க,

சூடான எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்,

கொத்தமல்லி-நறுக்கிய து-கொஞ்சம்,

செய்முறை:

மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் அகலமான பேசினில் போட்டு நன்கு கலந்து வைக்கவும். பின் தண்ணீர் ஊற்றி வடை மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசையவும் .இதை சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணையில் போட்டு வேக விடவும். வடைகள் நன்கு பொரிந்ததும் ,பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையான சாமை மதூர் வடை தயார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :