• JUST IN | சுட சுட

அண்ணாத்த படத்தின் போஸ்டர்: அசத்தும் ரஜினிகாந்த் லுக்!





அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

ரஜினிகாந்தின் புதிய படமான ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு வெளியாவதை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்குக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.அத்துடன் நேற்றே படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிடப்பட்டது. சில ரசிகர்கள்அந்த பர்ஸ்ட் புகைப்படத்துடன் ரஜினியின் வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்றே படத்தின் இரண்டாவது லுக்கையும் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. மோஷன் போஸ்டரில் புல்லட்டின் மீது அரிவாளுடன் ஆக்ரோஷமாக அமர்ந்திருக்கும் ரஜினியின் புகைப்படம் அதில் இடம்பெற்றிருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சஸ்பென்ஸ் நீடித்த நிலையில் - சென்ற டிசம்பரில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அடுத்த ஒரு சில வாரங்களிலேயே தான் அரசியலுக்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தது குறிப்பிடத் தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :