• JUST IN | சுட சுட

மகாகவி பாரதியார் நினைவு தினம்: - எடப்பாடி பழனிசாமி ட்வீட்!





இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பாரதியாரின் பெருமையை பதிவிட்டு வருகின்ற்னர். அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததவது:

மகாகவி பாரதியார் தன் இன்பத்தமிழ் கவிதைகளால் இந்திய மக்களின் விடுதலை வேட்கையை தூண்டியவர். மேலும் பெண்ணுரிமை போராளி, சாதி மறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதியும்கூட! "மகாகவி" என போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளில் அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.

-இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :