• தினம் ஒரு வடை

முந்திரி வடை


உஷாகுமாரி.

தேவையானவை:

முந்திரி பருப்பு – 1 கப்

பொட்டுக் கடலை – 1 ஸ்பூன்

வெங்காயம், பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப.

இஞ்சி – 1 துண்டு

கொத்தமல்லி, கருவேப்பிலை, சோம்பு - சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப.

எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

முந்திரியை ஊறவைத்து அரைத்து அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிந்த வெங்காயம், மிளகாய்,இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, நுணுக்கிய சோம்பு சேர்த்து கெட்டியாக வடை மாவு பததுக்குப் பிசையவும். பின்னர் மாவை வடைகளாக தட்டி காய்ந்த எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் ஹெல்தியான வடை ரெடி! சுவையோ அலாதி!

Comments

Sundari ghandhi says :

Nice recipe. Good work

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :