• JUST IN | சுட சுட

கேரளாவில் அதிகரிக்கும் நிபாவைரஸ் பரவல்: அண்டை மாநிலங்கள் அச்சம்!





கேரளாவில்நிபாவைரஸ்பரவல்அதிகரித்துவருவதால்,அண்டை மாநிலங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளை தமிழக அரசு அதிகரித்துள்ளது.நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரள பயணத்தை தவிர்க்க வேண்டும் என அம் மாநில மக்களை கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவிவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.மேலும் நிபாவைரஸும் பரவ தொடங்கியுள்ளது.கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபாவைரஸ் அறிகுறிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் கேரளாவின் அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் இறுதிவரை கேரள பயணத்தை தவிர்க்கவேண்டும் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை பரப்பவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :