• TRENDING | பர பர

ரஷ்யாவில் அஜித்: மோட்டார் சைக்கிளில் உலகப் பயணம்?





நடிகர் அஜித் நடித்து வரும் `வலிமை`. படத்தின் சண்டைக் காட்சிகளைப் படமாக்க ரஷ்யா சென்றிருக்கிறது படக்குழு. பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கும் ‘வலிமை’ படத்துக்கான ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலகளாவிய பைக் பயணம் குறித்து அஜித் பரிசீலித்து வந்ததாகவும் தற்போது முதல் கட்டமாக தன் பயணத்தை ரஷ்யாவில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜீத் ரஷ்யாவில் மோட்டார் சைக்கிளில் சுமார் 5,000 கி.மீ. தூரம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு `வலிமை` படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது அங்கிருந்து சுமார் 10,000 கி.மீ. வடகிழக்கு மாநிலங்கள் வரை சாலைப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :