• JUST IN | சுட சுட

75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள்: செப்டம்பர்-30 முதல் தடை!





தமிழகத்தில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் - 30 முதல் தடை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :