• JUST IN | சுட சுட

பாராலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாராவுக்கு மேலும் 1 பதக்கம்!





டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் அவனி லெகாரா மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படித்துள்ளார்.

டோக்கியோ பாரலிம்பிக்ஸில் இன்று 50 மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கலந்துகொண்ட அவனி லெகாரா, இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற சிறப்பு கிடைக்கப் பெற்றுள்ளார். இப்போட்டியில் சீனாவுக்கு தங்கமும் ஜெர்மனிக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

ஜெய்பூரைச் சேர்ந்த அவனி லெகாரா இந்த பாராலிம்பிக் தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போட்டியிலும் அவனி வெற்றி பெற்றால், ஒரே பாராலிம்பிக்கில் 3 பதக்கங்கள் கிடைக்கப் பெற்றவர் என்ற வரலாற்று சாதனை படைத்தவர் ஆவார் அவனி லெகாரா.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :