• JUST IN | சுட சுட

அரச பட்டத்தைத் துறந்தார் ஜப்பான் இளவரசி: சாமானிய முறையில் திருமணம்!





ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, அரசப் பட்டத்தைத் துறந்தார்.

டோக்கியோவில் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இளவரசி மகோவுக்கும் கெய் கொமுரோவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு இருவருக்கும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் திருமண நிச்சயம் முடிந்தது. இந்நிலையில் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதையடுத்து இளவரசி மகோவும் அமெரிக்காவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

இந்த ஜோடி ஜப்பான் அரச குடும்ப பாரம்பரிய முறையில் இல்லாமல், சாமான்யர்களைப் போல் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு வழங்கப்படும். அதன்படி இளவரசி மகோவிற்கு 137 மில்லியன் யென்(இந்திய மதிப்பில் சுமார் 8.76 கோடி) இழப்பீடாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் இழப்பீடு தனக்கு தேவையில்லை என இளவரசி மகோ மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :