• TRENDING | பர பர

’என்ஜாய் எஞ்சாமி’ டீமுடன் நடிகர் தனுஷ்; வைரல் போட்டோ!





மியூஸிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரத்யேக பார்ட்டியும் இசை கச்சேரியும் சமீபத்தில் நடந்தது. அதில் ‘என்ஜாய் எஞ்சாமி” ஆல்பத்தில் பாடிய தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இருவருடனும் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துகொண்டு அவ்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோ வைரலாகியுள்லது.

மேஸ்ட்ரோ இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இரு நாட்களுக்குமும் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாட, அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அன்று

நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். மேலும் மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன், தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த பிறந்தநாள் பார்ட்டி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பாடகி தீ உடன் இணைந்து ’’ரவுடி பேபி’’ பாடலை பாடி அசத்திய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Twitter : https://twitter.com/i/status/1432516873719992323

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :