• JUST IN | சுட சுட

ராஜீவ் காந்தி பெயரில் அறிவியல் நகரம்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!





மாகாராஷ்டிர மாநிலம் புனேவில் கட்டப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நகரத்துக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புனே அருகே பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்படவுள்ளது. இந்த அறிவியல் நகரத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயர் வைக்கப்படும். இந்த நகரமானது ரூ. 191 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.

-இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ‘ராஜீவ் கேல் ரத்னா’ விருதின் பெயர் ’தியான்சந்த் கேல் ரத்னா’ என்று மாற்றப்பட்ட நிலையில், அசாமில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை ’ஒராங்கா தேசிய பூங்கா’ என மாற்ற அசாம் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. `பெயரை மாற்ற வேண்டும்` என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்டு வரும் அறிவியல் நகருக்கு நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயர் வைக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :