• TRENDING | பர பர

ஒரே நாளில் கோடீஸ்வரர்: வலையில் சிக்கிய தங்க மீன்கள்!





மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் டாரே என்ர மீனவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவரான டாரே மும்பையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த 28-ம் தேதி, தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். அங்கு அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியதை உணர்ந்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்தார். அப்போது வலையில் சுமார் 150 மீன்கள் இருந்தன. சகமீனவர்களும் அவரும் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் – அந்த மீன்கள் அனைத்தும் முகவும் விலையுயர்ந்த கோல் எனப்படும் ரகத்தைச் சேர்ந்த மீன்கள் ஆகும்,.இந்தவகை மீன்கள் உணவுக்காக மட்டுமன்றி மருத்துவ குணங்களுக்காகவும் பல நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது. இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் தயாரிக்கவும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன் படுத்தப்படுகின்றன.

ஜாக்பாட் அடித்த சந்தோஷத்துடன் இந்த மீன்களுடன் கரை திரும்பிய சந்திரகாந்த, அவற்றை ஏலம் விட்டதில் சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிற்று. இதனை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் இந்த விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். மிகவும் விலை உயர்ந்த மீன் என்பதால், இவை தங்க மீன் எனப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :