• JUST IN | சுட சுட

#BREAKING: புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு: உத்தரவு நிறுத்தி வைப்பு!





தமிழகத்தில் புதிய வாகனங்கள் வாங்கும்போது `பம்பர் டூ பம்பர்` எனும் 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை கட்டாயமாக்கும்படி சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் இதை போக்குவரத்து துறை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் புதிய வாகனங்களுக்கான இந்த புதிய நடைமுறையை நேற்ரு முதல் (செப்டம்பர் – 1) பின்பற்றும்படி, போக்குவரத்து துறை இணை கமிஷனர் முத்து, மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் குறிப்பிட்டதாவது:

செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும், வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணியர் பயனடையும் வகையில் `பம்பர் டூ பம்பர்` எனும் காப்பீட்டை ஐந்தாண்டுகளுக்கு கட்டாயமாக்க வேண்டும்.

-இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முதல் விற்கப்படும் புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :