• JUST IN | சுட சுட

125 ரூபாய் சிறப்பு நாணயம்: பிரதமர் மோடி வெளியிட்டார்!





சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் அமைப்பின் நிறுவனர் சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

இஸ்கான அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாள் விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி 123 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாணயத்தை வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சி மூலம் வெளியிட்டார்.

இந்த சிறப்பு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் பேசியதாவது:

சுவாமி பிரபுபாதா சிறந்த கிருஷ்ண பக்தர் மட்டுமல்ல.. சிறந்த தேசபக்தரும்கூட! நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது, சுவாமிஜி ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக, அவர் கல்வி பயின்ற ஸ்காட்டிஷ் கல்லூரியில் டிப்ளமோ பெற மறுத்துவிட்டார். இந்த ஹரே கிருஷ்ணா இயக்கம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 100-க்கும் மேற்பட்ட ஆலயங்களை நிறுவியுள்ளது. உலகுக்கு பக்தி யோகப் பாதையைக் காட்டும் பல புத்தகங்களை சுவாமி பிரபுபாதா எழுதியுள்ளார்.

உலகின் பல நாடுகளில் இஸ்கான் கோவில் இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

-இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :