• தினம் ஒரு ஸ்வீட்

ஹெல்த்தி சுகியன்


சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்

தேவையானவை:

முளைக்க வைத்த காராமணி, பாசிப்பயிறு – தலா 100 கி.

தேங்காய் துருவல் - 100 கிராம்

துருவிய வெல்லம் - கால் கிலோ :

ஏலக்காய் பொடி – சிறிது

மேல் மாவிற்கு:

கோதுமை மாவு, அரிசி மாவு – தேவைக்கேற்ப.

பொரிக்க - ரீஃபைண்ட் ஆயில்.

செய்முறை:

முளைத்த பயிறு காராமணி இரண்டையும் தண்ணீர் விடாமல் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அரைத்த விழுதை விட்டு வெல்லம் சேர்த்து தேங்காய் சேர்த்து நன்கு சுருள கிளறவும்.ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

அரிசி மாவு கோதுமை மாவு இரண்டையும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, நீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.கிளறிய பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாவில் தோய்த்து ரீபைண்ட் ஆயிலில் பொரித்து எடுக்கவும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :