• தினம் ஒரு ஸ்வீட்

சிகப்பு அவல் உருண்டை.


ஜெயலட்சுமி

தேவையானவை:

சிகப்பு அவல் – 1 டம்ளர்

வெள்ளம் தூள் செய்தது - 1 டம்ளர்

நிலக்கடலை வறுத்தது - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 6.

நெய் - சிறிதளவு.

செய்முறை:

சிகப்பு அவலை வாணலியில் போட்டு சிறிது நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலையையும் தோலுரித்த ஏலக்காயையும் சேர்க்கவும்.இவற்றை மிக்ஸியில் இட்டு நைசாக மாவாக அரைக்கவும்.

வெல்லத்தை சிறிது நீர் விட்டு ஒரு கம்பி பாகு எடுத்து வைக்கவும். அடுப்பை ஆப் செய்யவும். சூடாக இருக்கும் போதே அரைத்த அவல் கலவையை அதில் கொட்டி கிளறி, நெய் தொட்டுக் கொண்டு வேண்டிய சைஸில் உருண்டைகள் பிடிக்கவும். சுவையான சத்தான சிகப்பு அவல் உருண்டை தயார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :