• தினம் ஒரு ஸ்வீட்

மேங்கோ வெனிலா சந்தேஷ்


மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்

தேவையானவை:

பனீர்-1/4கிலோ,

சர்க்கரை (பொடித்த து)-1/2கப்,

வெனிலா எசென்ஸ், மேங்கோ எசென்ஸ்-இரண்டு துளிகள்,

புட் கலர்(மஞ்சள்)-1சிட்டிகை,

செர்ரி-1/4 கப்

செய்முறை

பனீரை உதிர்த்து நன்றாக பிசையவும். மிருதுவாக ஆனவுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை இரண்டு பகுதிகளாக பிரித்து, ஒன்றில்மேங்கோ எசென்ஸும் மஞ்சள் கலரையும் சேர்த்து பிசையவும். மற்றதில் வெனிலா எசென்ஸ் சேர்த்து பிசையவும். ஒரு டிரேயில் இந்த இரு பனீரையும் ஒன்றின் மேல் மற்றொன்றை அடுக்கி இருக்குமாறு வைத்து சமமாகப் பரப்பி பிரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து செட் ஆனதும் எடுக்கவும். விருப்பமான வடிவில் கட் பண்ணி மேலே செர்ரி வைத்து அலங்கரிக்கவும். சுவையான பெங்காலி ஸ்வீட் தயார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :