• தினம் ஒரு ஸ்வீட்

சோளமாவு அல்வா


ஷெண்பகம் பாண்டியன், சத்துவாச்சாரி.

தேவையானவை:

சோளமாவு - 1 கப்,

சர்க்கரை - 2 கப்

நெய் – ½ கப்.

முந்திரி, பாதாம் துருவியது - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு கப் சோளமாவை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.சற்று பிசுபிசுப்பான சிரப் வந்தவுடன் சோளமாவு கரைசலை சேர்த்து கிளறவும். சுருண்டு வரும் போது கலர் நெய் சேர்க்கவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரி, பாதாம் தூவி ஆறியவுடன் துண்டு போடவும்.பாம்பே அல்வா,கராச்சி அல்வா என்று இந்த சோளமாவு அல்வாவுக்கு பெயர்கள் உண்டு. செய்வது சுலபம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :