• தினம் ஒரு ஸ்வீட்

மைசூர் பாக்


மங்களகெளரி, மலேசியா

மங்கையர் மலரில் கற்றுக்கொண்ட மைசூர் பா. எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை. மங்கையர் மலரில் ஒரு வாசகி எழுதியிருந்தார் இந்த ரெசிபியை படித்தது முதல், நானும் மைசூர் பாக் எக்ஸ்பர்ட் ஆயிட்டேனாக்கும்.

தேவையானவை:

கடலை மாவு - 3/4 கப்,

நெய் - 2 ½ கப்

சீனி - 2 ½ கப்

செய்முறை:

சீனி நனையும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். நெய்யை உருக்கிக் கொண்டு சலித்த கடலை மாவோடு கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ளவும். சீனி கரைந்து பொங்கி நுரைத்து வரும்போது கடலை மாவு கலவையை கொட்டி கைவிடாமல் கிளறவும். அதிகபட்சம் பதினைந்து நிமிடம் கிளறினாலே ஓரங்கள் ஒட்டாமல் கலர் சிறிது மாறி வரும். இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் கீறி விட்டு, நன்கு ஆறியப் பின்னர் துண்டு போடலாம். சாப்ட்டோ சாப்ட் மைசூர் பார்க் தயார்.

இதில் நான் செய்த மாற்றம் ஒன்று இருக்கிறது. இங்கே நெய் அதிக விலை. ஆக 1 கப் கடலை மாவு, 2 கப் நெய், 2 கப் சீனி. துளி உப்பு. என அளவில் சின்ன மாற்றம் செய்துதான் இன்றுவரை செய்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :