• SPARKLES | மினுமினு

’அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ –கருத்தரங்கு!


- சக்தி. சுவாமிநாதன்

‘’அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’’ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை செயல்படுத்தி வரும் நிலையில், இத்திட்டத்திலுள்ள சாதக, பாதகங்களை அலசி கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் கும்பகோணம் திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல சிவாச்சார்யார்களும் பட்டாச்சார்யார்களும் கலந்துகொண்டு தம் கருத்துக்களை தெரிவித்தனர்.

கும்பகோணம் ஜோதி மலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு அந்த அமைப்பின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்தார்கள். சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட கருத்துக்கள்...

திருவடிக் குடில் சுவாமிகள் தன் தொடக்க உரையில் பேசியதாவது:,

‘’அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு பல்வேறு பிரச்னைகளும், விவாதங்களும் தற்போது எழுந்துள்ளன.

அர்ச்சகர் பணி என்பது சிவன்,விஷ்ணு ஆலயங்கள் தவிர பெரும்பாலnன கிராமக் கோயில்களில் ஏற்கனவே Uல்வேறு சாதியை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.இந்த திட்டத்தை சாதி அரசியல் நோக்கில், ஒரு சமூகத்திற்கு எதிராக மட்டுமேகொண்டு வரப்பட்டதாக இருந்தால்,அது முற்றிலும் தவறாகி விடும். மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால், ஏற்கனவே பணியில் உள்ல சிவாச்சாரியார்கள், குருக்கள், ஆதி சைவகுலத்தை சார்ந்தவர்கள், தங்களது பணியை இழக்கக்கூடிய சூழலும் உருவாகி விடக் கூடாது.காரணம் இவர்கள் தொன்று தொட்டு பூஜை செய்வதை தங்களது குல கடமையாகவே எண்ணி வாழ்ந்து வருகின்றனர் .மேலும்,வயது முதிர்ந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்குதல் என்பதையும் பரிசீலிக்க வேண்டும். காரணம் இவர்கள் போன்றவர்களால் தான் கோயில்கள் இது நாள் வரை நிலை பெற்றியிருக்கிறது. பூஜையால் வருமானம் கிடைக்கிறதோ இல்லையோ தங்களுக்கு கிடைக்க கூடிய உணவுகளை இறைவனுக்கு நிவேதனம் செய்து, பூஜைகளை முறையாக செய்யக் கூடிய சிவாச்சாரியார்கள், குருக்கள், அர்ச்சகர்களை திடீரென புறந் தள்ளி விட முடியாது .

பல கோயில்களீல் சன்னதிக்கு ஒரு பூஜை செய்பவர் என்ற நிலை மாறி தற்போது பெரிய கோயில்களில் கூடகூடுதலாக, சமையல், விளக்கேற்றுதல், பாதுகாப்பு பணி என அனைத்து பணிகளையும் சுமக்கும் நிலையில், குருக்கள், Uட்டாச்சாரியார்கள் இருந்து வருகின்றனர் ஒரு திட்டம் கொண்டு வரப்படும் போது குடிமக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த வகையில்,பூஜை செய்பவர்கள் தெய்வத்துடன் தினமும் தொடர்புள்ளவர்கள் என்பதால், ஆச்சார பூஜை என்பது முக்கியமாக இருந்து வருகிறது.மாமன்னன் ராஜ ராஜன் காலத்திய கல்வெட்டில்கூட யோக்கியர் அல்லாதவர், பூஜை, தொண்டுக்கு தகுதியற்றவர்கள் என்று குறிப்பிட்டு இருப்பதையும் இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்..

ஆயினும் தற்போது கோவில்களில் பூஜை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, அர்ச்சகர்களின் தேவையும் எழுந்துள்ளதை பார்க்க முடிக்கிறது. பூட்டியே கிடக்கும் திருக்கோயில்களும் இருக்கதான் செய்கிறது. ஏன்? தேவாரம் பாடல் பெற்ற மற்றும் 108 திவ்ய தேசம் என கூறப்படும்

ஆலயங்களில் கூட பழக்கவழக்கம் தெரிந்த பூஜை செய்பவர்கள் இல்லாததால்,திருவிழா கூடநடத்த முடியாத நிலை உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும்போது இப்பிரசினைகளை சரி செய்ய முடியும், .

முக்கியமாக, தமிழகத்திலுள்ள சைவ திருமடங்கள் மற்றும் வைணவமடங்கள் சார்ந்த ஆதீனம், ஜீயர்கள் இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும், தமிழக அரசும் இவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் மொத்தத்தில் காலச் சூழல் கருதி மாற்றம் தேவை’’ என்று தனது உரையை முடித்தார் திருவடிக் குடில் சுவாமிகள்.

கலந்தாய்வில் பேசிய மற்ற சிவனடியார்களின் கருத்துக்கள்..

ஹரிபாபு _ ஸ்தபதி (சுவாமிமலை)

’’ஆலயத்தில் ஏற்கனவே தொண்டுசெய்து வருபவர்களுக்கு ஆலயத்திலேயே பயிற்சி கொடுத்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் .எனக்கு தெரிந்து, 14 வருடமாக .இதுபோன்று எல்லா நடைமுறையும் தெரிந்து உதவியாளராக பணியாற்றி வருபவர்களும் இருக்கின்றனர்’’

கோவிந்தராஜன் (வலங்கைமான்).அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் புதிதாக பலருக்கும் இறைவனை தொட்டு பூஜிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், கோயில்களில் திருவிழா, கும்பாபிஷேகம் போன்ற சமயங்களில் இந்து அறநிலைய துறையின் கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும் என்றார்.

பாலசுப்ரமணியன் (கும்பகோணம் )

முதற்கட்டமாக பூஜை இல்லாமல் இருக்கும் ஆலயங்களை பட்டியலிட்டு,அந்தந்த இடங்களில் தகுதியானவர்களை பணி அமர்த்த வேண்டும். அவருடைய பூஜை முறைகளை கவனித்து,பிறகு, அடுத்த கட்டங்களாக, அவர்களுக்கு பெரிய கோயில்களில் பணி தர வேண்டும் என்றார்.

சண்முகம் ( சாக்கோட்டை)

புதிதாக அர்ச்சகர்களாக வருபவர்கள், ஏற்கனவே பூஜை செய்து வருபவர்களை குருவாக ஏற்று கொண்டு நடைமுறை பழக்க வழக்கங்களை அவர்களிடம் கற்று கொள்ள வேண்டும். அதே போல புதியவர்களுக்கு, பூஜை செய்ய மூத்தவர்கள் வழிகாட்டியாக திகழ வேண்டும். குறிப்பாக ஆலயங்கள் பேதமின்றி இருக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும், பூஜை களும், வழிபாடுகளும் தடைபடக் கூடாது. தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றார்.

ரம்யா செந்தில்நாதன் ( கும்பகோணம்)

எம்பெருமான் தன்னுடைய ஒரு பாகத்தை அம்பிகைக்கு தந்துள்ளார்.அவ்வாறு இருக்கையில் பெண்கள் எம்பெருமானை

பூஜிப்பதில், எந்த தவறும் இல்லை என்பதுஅடியேன் கருத்து. இறைவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்ய பெண்களுக்கும் விருப்பம் இருப்பது நியாயம்தானே?!

ஐயப்பன் (கும்பகோணம்)

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கும் கோயில்களில், ஏற்கனவே பூஜை செய்து வரக்கூடிய அந்தந்த கிராமத்தை சார்ந்தவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் பணிகளை இந்து சமய அறநிலைய துறை செய்ய வேண்டும் என்றார்.

மனோகர் (கும்பகோணம்)

காலச் சூழல் கருதி மாற்றம் தேவை. அதனை முறையாக செய்ய வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கவிழ்த்து விட்டு நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிடக் கூடாது

Comments

Nagarajan says :

பலவிதமான நடைமுறைகள் கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறி வந்துள்ளது. தொடர்ந்து இருந்து வருகிற எந்த நடைமுறைகளையும் வலுகட்டாயமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.

K. S. Krishnaveni says :

இருக்கும் அமைப்பை மாற்றாமல் ,முதலில் பூஜை நடைபெறாமல் இருக்கும் கோவில்களை பட்டியலிட்டு ,சிதிலமடைந்த கோவில்களுக்கு ஒருவேளையாவது பூஜை நடைபெறும் படி ஏற்பாடு செய்து அதற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து தகுந்த பயிற்சியளித்து பணியில் அமர்த்த வேண்டும். அவர்களின் தொண்டை கவனத்தில் கொண்டு மேற்படி அர்ச்சகர்கள் இல்லாமல் இருக்கும் கோயில்களுக்கு நியமிக்கலாம் . ற்கனவே இருக்கும் அர்ச்சகர்களை (பாரம்பரியமாக செய்பவர்களை) வயது காரணம் காட்டி ஒதுக்காமல் அர்ச்சகர்கள் தேவைப்படும் இடங்களில் நியமித்து தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :